+452 2350858, +452 2346554
nadarmahajanasangam@gmail.com
#2, South Chitirai Street, Madurai - 625001
Download Nadar Joining Formநா.ம.ச. "ராஜா" K.S.P. கணேசன் அகாடமி
ஒரு சாதனைப் பயணம் (2010 - 2025)
நாடார் மஹாஜன சங்கம் (NMS) 1910-ம் ஆண்டு பொறையார் திரு. T.இரத்தினசாமி நாடார் அவர்களால் தொடங்கப்பட்டது. சமூகத்தின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது. இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரில் நடைபெற்ற 71-வது மஹாஜன சங்க மாநாட்டில், அப்போதைய பொதுச்செயலாளர் திரு. ஜி. கரிக்கோல்ராஜ் அவர்களால் "காமராஜ் யுவேந்திரா" என்ற இளைஞர் அமைப்பு 14.07.2016 அன்று தொடங்கப்பட்டது. இதுவே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்க அடித்தளமிட்டது.
2019-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) காவலர் தேர்வுக்காகச் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சுமார் 767 மாணவ-மாணவியருக்கு (721 மாணவர்கள், 46 மாணவிகள்) பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 127 பேர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 52 பேர் பணி நியமனம் பெற்றனர். இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து, 2021 பிப்ரவரி மாதத்தில் நா.ம.ச. "ராஜா" K.S.P. கணேசன் அகாடமி முறையாகத் தொடங்கப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும், மாணவர்களின் அரசுப் பணி கனவு சிதையக்கூடாது என்ற நோக்கில் மதுரையின் மையப் பகுதியில் உள்ள நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார்களையும் ஒன்றாக சேர்க்கும் வகையில் 1910ல் பொறையார்திரு. T. இரத்தினசாமி நாடார் அவர்களால் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் திரு. W.P.A. சௌந்தரபாண்டியனார், திரு. ப.ரா. முத்துச்சாமி நாடார் மற்றும் திரு. V.P.R. கங்காராம் துரைராஜ் ஆகியோர் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உறவின்முறை அமைத்து நமது சமூகத்தவர்களுக்கு கல்விப்பணி, அரசுப்பணி மற்றும் வணிகப்பணி போன்ற உதவிகள் கிடைக்கச் செய்தனர்.
இந்த வகையில் நமது சமூக இளைஞர்கள் அடுத்தடுத்த பாதைக்கு தங்களை தயார்செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும், உயர்கல்வி, உயர்வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கும் கோவில்பட்டியில் நடைபெற்ற 71ஆவது மாநாட்டில் பொதுச்செயலாளர் அவர்களால் “காமராஜ் யுவகேந்திரா” என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 14.07.2016 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நமது பெருந்தலைவரின் பிறந்தநாள் மிகப்பெருமானமாக கொண்டாடப்பட முடியவில்லை என்ற எண்ணம் நமக்கு இருந்தது. ஆனால் நம் பொதுச்செயலாளர் வேறுவிதமாக சிந்தித்தார். கல்வித்திருவிழா கொண்டாட முடியவில்லை என்றாலும் நம் சமூக மாணவர்களின் உயர்வுக்கு வழிவகை செய்யலாம் என்று முயற்சித்து நமது சமூக பெருமக்களிடம் இந்த சிந்தனையை கொண்டு சென்று, அனைத்து அரசுத் தேர்வுகளிலும் நமது சமூக மாணவர்கள் பங்கு பெறுமளவில் இருக்கவேண்டும் என்றார். நமது சமூக இளைஞர்களுக்கும் தபால் மூலமாகவும், வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாகவும் அரசுத் தேர்வுக்கு தயாராகும் நமது மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் முதல் முயற்சியாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்று, இதில் நமது சமூகத்தைச் சேர்ந்த 721 மாணவர்கள் மற்றும் 46 மாணவிகள் ஆகிய மொத்தமாக இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்புகள் 01.11.2020 அன்று தொடங்கப்பட்டு 10.12.2020 வரை 40 நாட்கள் நடைபெற்றது. 01.11.2020 அன்று நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் துவக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்க கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் அருகே உடற்பயிற்சிக்கூடம் புதிதாக கட்டப்பட்டு 01.11.2020 அன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கல்லூரி விடுதியில் செய்யப்பட்டிருந்தது. நமது மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி, உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம், படிப்பதற்குத் தேவையான புத்தகம், மாணவர்களின் உடற்பயிற்சிக்குத் தேவையான சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 400 மாணவர்கள் மட்டுமே முழு உத்வேகத்துடன் இறுதிநாள் பயிற்சிவரை மேற்கொண்டனர்.
மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 23.12.2020 முதல் 12.01.2021 வரை மாணவ / மாணவிகளின் சுய மதிப்பீடு மதிப்பெண் மதிப்பீட்டின் அடிப்படையில் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவ / மாணவிகளும் உடற்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் முயற்சியும் நமது பயிற்சியும் இணைந்து 127 மாணவ / மாணவிகளை எழுத்துத் தேர்வில் வெற்றிபெறச் செய்தது. மாணவர்களின் இந்த வெற்றி நமக்கு அடுத்த வரவிருக்கும் அனைத்து மத்திய, மாநில அரசுத் தேர்வுகளில் நமது மாணவர்களை பங்கேற்க வைக்க அகாடமி உருவாக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது. இதனுப்படியாக உருவாக்கப்பட்டதுதான் நமது நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமி. புகழ் பெற்ற ஆரோக்கிய பால் நிறுவனர் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய திரு. R.G. சந்திரமோகன் அண்ணாச்சி அவர்கள் பெருமளவில் நிதி உதவி வழங்கி அகாடமி உருவாக்க உதவியதால் நமது சங்கம் அகாடமிக்கு அவருடைய தந்தையின் பெயரை வழங்கி சிறப்பித்தது. 13.02.2021 அன்று திறப்புவிழா நடத்தப்பட்டு மிகச்சிறப்பான முறையில் அகாடமி தொடங்கப்பட்டது.
நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமி நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் மூன்று தளத்துடன் 64 அறைகளை கொண்டது. மாணவ / மாணவிகளுக்கு தனித்தனி தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படுகிறது. நல்ல காற்றோட்ட வசதியுடன் LCD புரொஜெக்டர் கொண்ட கூடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள் அடங்கிய நல்ல வெளிச்சமும் காற்றோட்டமுமான மாணவர்கள் அமர்ந்து படிக்க பெரிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அகாடமியில் மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்களின் பயிற்சிக்கு இடையூறு இல்லாமல் இருக்க ராஜா K.S.P கணேசன் சார்பில் ஜெனரேட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. அகாடமி முழுவதும் இலவச இணையதள வசதி அமைக்கப்பட்டுள்ளது. அகாடமியில் மாணவர்கள் Tally பயில்வதற்கு 10 கணினிகளுடன் கூடிய வகுப்பறை UPS வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
விடுதியிலேயே நவீன சமையலறை உள்ளது. மாணவ / மாணவிகளுக்கு பகுதி அடிப்படையில் வீட்டு சாப்பாடு போன்ற மூன்று வேளை ருசியான உணவு மற்றும் இரண்டு வேளை தேநீர் வழங்கப்படுகிறது.
காவலர் உடற்தகுதி தேர்வுக்கான தேதியை அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து A. அனந்தன் இணைச்செயலாளர் (மேன்சன்) மற்றும் T. குமார் உடற்கல்வி இயக்குநர் ஆகியோரின் முயற்சியில் மீண்டும் காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு 10.04.2021 முதல் அகாடமியிலேயே தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கான தேதியை அரசு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து 20.04.2021 வரை பயிற்சி வழங்கப்பட்டது. மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து அரசு உடற்தகுதி தேர்வுக்கான தேதியை வெளியிட்டு குறுகிய கால இடைவெளியில் மீண்டும் பயிற்சி வகுப்புகள் 16.07.2021 முதல் 27.07.2021 வரை நடத்தப்பட்டது. அகாடமியிலேயே மாணவ / மாணவிகள் தங்கவைக்கப்பட்டு கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. நம்முடைய விடாமுயற்சியும் மாணவர்களின் தொடர்ச்சியான முயற்சியும் நமக்கு நல்லொரு வெற்றியைத் தந்தது. தற்போது காவலர் பணிக்கு 52 மாணவ / மாணவிகள் தேர்வாகியுள்ளனர் என்பது நமக்கு பெருமையளிக்கிறது.
நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமியில் TNPSC குரூப் - IV / VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 13.02.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 36 மாணவ / மாணவிகள் முழுநேரமாகவும் மேலும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவிகள் 67 பேர் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர். மேலும் நா.ம.ச. சொந்தமான வாகன் கல்லூரி மாணவிகளுக்கு பகுதிநேரமாக நமது அகாடமி பயிற்சியாளர்கள் நேரில் சென்று வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அனைத்து சமூக மாணவர்களும் மிகக் குறைந்த பயிற்சி கட்டணத்தில் பயின்று வரும் நிலையில், கொரோனாவின் தாக்கத்தினால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு சென்று விட்டனர். மீண்டும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் அகாடமி தொடங்கப்பட்டபோது மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துவிட்டது. தற்போது 25 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு எதிர்வரும் தேர்விற்கு தயார்செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசுத் தேர்வான பொதுப்பணி காவலர் SSC GD (Constable) தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 21.04.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு 21 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு 15.11.2021 அன்று நடைபெற்ற மத்திய அரசு SSC GD (Constable) எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு 14 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் 18.05.2022 அன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு 05 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எழுத்தர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு 01.07.2021-ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 41 மாணவர்கள் மற்றும் 17 மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் 13 மாணவ / மாணவிகள் வெற்றி பெற்று பணிக்கு சென்றுள்ளனர். காவலர் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி மேற்கொள்ள வந்திருந்த நமது சமூக மாணவர்களிடம் பொதுச்செயலாளர் அவர்கள் கலந்து உரையாடி மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன்மூலம் நமது மாணவர்கள் அரசு பணிக்கான தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இன்றி இருப்பதை உணர்ந்தார். நமது மாணவர்களிடம் அரசுப் பணிக்கான ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அனைத்து உறவின்முறைகளுக்கும் தபால் மூலமாகவும் நமது நாடார் மகளிர் மன்றங்கள் மூலமாகவும் மற்றும் சங்க நிர்வாகிகள் இணைந்து தேனி, இராமநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தி அரசுத் தேர்வுக்கு தயாராகும் நமது மாணவர்களை சலுகையின் அடிப்படையில் பயில அழைப்பு விடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து தென்காசி, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்ததைத் தொடர்ந்து 09.08.2021-இலிருந்து மேலும் இரண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர் வே.வே.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 20.08.2021-இலிருந்து TNPSC குரூப் - IV மற்றும் VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அகாடமி பயிற்சியாளர்கள் சென்று பகுதிநேரமாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இதில் 102 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் மாநில அரசு TNPSC தேர்வுகளை 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டதைத் தொடர்ந்து நமது பொதுச்செயலாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் இணைந்து அனைத்து மாவட்டத்திற்கும் சென்று அரசுத் தேர்வு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி நம் மாணவர்கள் அரசு வேலை பெறுவதில் முன்னிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது அகாடமியில் குரூப் IV மற்றும் V.A.O பயிற்சி வகுப்புகளில் 86 மாணவர்களும், வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் ஏழு மாணவர்களும், மத்திய அரசு பணிக்கான S.S.C - GD பயிற்சி வகுப்புகளில் எட்டு மாணவர்கள் என மொத்தம் 101 மாணவர்கள் முழுநேரமாகவும் கல்லூரி மாணவர்கள் 22 பேர் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர். இதில் 77 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்றனர். இம்மாணவர்கள் 25.06.2022 அன்று நடைபெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு 06 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் 26.07.2022 அன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 1 மாணவர் தேர்ச்சி பெற்று சார்பு ஆய்வாளராக பணியில் உள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எழுத்தர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு 21.04.2022-ல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 51 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் 07 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.
24.07.2022 அன்று நடைபெற்ற குரூப் IV மற்றும் V.A.O தேர்வில் 87 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 04 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றுள்ளனர்.
25.02.2023 அன்று நடைபெற்ற குரூப் II முதல்நிலை தேர்வில் நமது அகாடமி மாணவ / மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 09 மாணவ / மாணவிகள் சென்னை அப்பல்லோ அகாடமியில் நமது அகாடமியின் மூலம் பயிற்சிக்கட்டணம் செலுத்தி முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டதில் 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் பயிற்சியாளர்களுடன் மொத்தம் 7 பேர் தேர்ச்சி பெற்று அடுத்தக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 09.08.2022 முதல் 24.11.2022 வரை நடைபெற்றது. 27.11.2022 நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு 20 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் 26.02.2023ல் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 6 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.
சார்பு ஆய்வாளர்களுக்கான (SUB INSPECTOR OF POLICE) பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள் மத்திய அரசுத் தேர்வான பொதுப்பணி காவலர் SSC GD (Constable) எழுத்துத் தேர்விலும் கலந்து கொண்டு 20 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் உடற்தகுதி தேர்வில் 08 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) Sub - Inspectors of Police 26.08.2023ல் நடைபெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு 05 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு இதில் 1 மாணவர் தேர்ச்சி பெற்று சார்பு ஆய்வாளராக பணிவாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 01.09.2023 முதல் 05.12.2023 வரை நடைபெற்றது. 10.12.2023 நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு 32 மாணவ / மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் 06.02.2024ல் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்தக்கட்ட தேர்வு முடிவுக்கு காத்திருக்கின்றனர்.
மத்திய அரசுத் தேர்வான பொதுப்பணி காவலர் SSC GD (Constable) எழுத்துத் தேர்வில் 33 மாணவர்கள் கலந்து கொண்டு 21 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – TNPSC GROUP – IV / VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 02.01.2024 முதல் 06.06.2024 வரை நடைபெற்றது. 49 மாணவர்கள் 09.06.2024 நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமியின் கிளை அகாடமிகளாக கோவில்பட்டி, பாலையம், இராஜபாளையம், திருச்செங்கோடு, சிவகிரி, சிவகாசி மற்றும் வடலூரில் அகாடமிகள் தொடங்கப்பட்டு 05.02.2024 முதல் 26.06.2024 வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் 09.06.2024 நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 90 காலிப்பணியிடங்களுக்கான 13.07.2024ல் நடைபெற்ற TNPSC GROUP - I (COMBINED CIVIL SERVICE EXAMINATION) முதல்நிலைத் தேர்வுக்கு சென்னை அப்பல்லோ பயிற்சி மையத்தில் 29.04.2024 முதல் 06.07.2024 வரை 3 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கு இலவசமாக தங்கும் வசதியுடன் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான முழுக்கட்டணத்தையும் நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமி ஏற்றுக்கொண்டது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 2327 காலிப்பணியிடங்களுக்கான 14.09.2024 நடைபெற்ற TNPSC GROUP – II / IIA முதல்நிலைத் தேர்வுக்கு நம் சமூக மாணவர்களில் அப்பல்லோ பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகளுக்கு சென்னை அப்பல்லோ பயிற்சி மையத்தில் 16.07.2024 முதல் 08.09.2024 வரை இலவசமாக தங்கும் வசதியுடன் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான முழுக்கட்டணத்தையும் நா.ம.ச. “ராஜா” K.S.P கணேசன் அகாடமி ஏற்றுக்கொண்டது.
2025ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக எமது மாணவர்கள் சுமார் 70 பேர் TNPSC, SSC, TNUSRB ஆகிய தேர்வுகளை நன்முறையில் எழுதியனர். அதில் TNPSC Group 4இல் 3 பேரும், SSC GD தேர்வில் 7 பேர் பணிநியமன ஆணை பெற்றனர். மற்றும் TNPSC Group-2 தேர்வில் 6 பேர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று அடுத்தகட்ட முக்கிய தேர்வையும் எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். எமது மாணவர்கள் TNUSRB SI தேர்வில் 12 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் TNUSRB PC தேர்வில் 25 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றி, அதில் 7 பேர் உடற்தகுதி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அகாடமி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மாணவர்கள் பெற்ற சாதனைகளின் தொகுப்பு பின்வருமாறு:
| வ. எண் | பணிக்கான தேர்வின் பெயர் | எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோர் | பணி நியமனம் |
|---|---|---|---|
| 1 | TNUSRB Police Constable (2021) | 127 | 52 |
| 2 | Tamilnad Mercantile Bank Clerk (2021) | 34 | 9 |
| 3 | SSC GD / CRPF / BSF (2021) | 14 | 4 |
| 4 | TMB Clerk (2022) | 15 | 7 |
| 5 | TNUSRB SI (2022) | 6 | 1 |
| 6 | TNPSC Group II (2022) | 15 | 2 |
| 7 | TNUSRB Police Constable (2022) | 20 | 6 |
| 8 | TNPSC Group IV / VAO (2022) | 4 | 4 |
| 9 | SSC GD (2022) | 25 | 8 |
| 10 | TNUSRB SI (2023) | 5 | 1 |
| 11 | TNUSRB Police Constable (2023) | 32 | 5 |
| 12 | TNPSC Group IV / VAO (2024) | 3 | 3 |
| 13 | SSC GD (2025) | 18 | 7 |
| 14 | TNPSC Group IV / VAO (2025) | 5 | 3 |
| 15 | TNPSC Group II (2025) | 4 (Prelims) | Waiting |
| 16 | TNUSRB Police Constable (2025) | 26 | 7 (Physical) |
| 17 | TNUSRB SI (2025) | 12 (Physical) | - |
| 18 | RRB Group-D (2025) | Waiting | - |
அகாடமி மூலம் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்த சில முக்கிய மாணவர்களின் விவரங்கள் (கோப்புகளின் அடிப்படையில்):
-
தமிழ்நாடு காவலர் (Police Constable):
- 63-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 2021, 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற காவலர் தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.
-
TNPSC மற்றும் இதர தேர்வுகள்:
- குரூப்-IV மற்றும் VAO தேர்வுகளில் மொத்தம் 7 மாணவர்கள் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்27.
- 2023-ம் ஆண்டு நடைபெற்ற SI (உதவி ஆய்வாளர்) தேர்வில் ஒரு மாணவர் வெற்றி பெற்று தற்போது பணியில் உள்ளார்.
- முழு நேர வகுப்புகள்: TNPSC குரூப்-IV / VAO தேர்வுக்கும் மற்றும் காவலர் தேர்வுக்கும் மாணாக்கர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
- வங்கித் தேர்வுகள்: IBPS மற்றும் TMB வங்கித் தேர்வுகளுக்கான பகுதி நேர வகுப்புகளில் மாணாக்கர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
- சான்றிதழ் படிப்பு (Certificate Course Tally Prime) அறிக்கை 2025 – First Batch
அறிக்கை விவரங்கள்
- படிப்பின் பெயர்: டெல்லி பிரைம் சான்றிதழ் படிப்பு (Tally Prime Certification Course)
- அமைப்பாளர்: என்.எம்.எஸ் ராஜா கே.எஸ்.பி கணேசன் அகாடமி
- நாள்: 4-10-2025
- இணைந்து வழங்குபவர்: ஷிக்ஷா சிம்பிள் லெர்ன் (SHIKSHAA SIMPLE LEARN), மதுரை
- பயிற்சி காலம்: 30 மணிநேரம் (23-07-2025 முதல் 26-09-2025 வரை)
பாடத்திட்ட மேலோட்டம்
- இந்த டெல்லி பிரைம் சான்றிதழ் படிப்பானது, மதுரை ஷிக்ஷா சிம்பிள் லெர்ன் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) படி நடத்தப்பட்டது.
- திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ் பெறுவதற்காக, டெல்லி பிரைம் மென்பொருளில் விரிவான பயிற்சியை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
"மொத்தம் 16 மாணவர்கள் இந்தச் சான்றிதழ் படிப்பை வெற்றிகரமாக முடித்து, தங்களது டெல்லி பிரைம் (Tally Prime) நிறுவனச் சான்றிதழைப் பெற்றனர்."
