+452 2350858, +452 2346554
nadarmahajanasangam@gmail.com
#2, South Chitirai Street, Madurai - 625001
Download Nadar Joining FormNMS இளைஞரணியின் வரலாறு
நூற்றாண்டு கண்ட நாடார்களின் தாய் சங்கமான நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச்செயளாராக கால் நூற்றாண்டுகளாக இருந்து வரும் அண்ணாச்சி திரு G. கரிக்கோல்ராஜ் அவர்களுக்கு, நம் நாடார் சமுதாய இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் ஒரு சரியான அமைப்பு வேண்டுமென்ற கனவு இருந்து வந்தது. அவரது கனவிற்கு உயிர்கொடுக்கும் வகையில் நாடார் மஹாஜன சங்கத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்ட அமைப்புதான் NMS இளைஞரணி .. முதல் முதலாக பெரும் முயற்சியுடன் நாடார் மஹாஜன சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு NMS இளைஞரணி நிர்வாகிகள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டு அதன் அறிமுக விழா மற்றும் முதல் செயற்குழு கூட்டம் ( 19-04-2025 ) சனிக்கிழமை அன்று, மதுரை - நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள நா.ம. ச ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் வைத்து துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து வந்திருந்த NMS இளைஞரணி நிர்வாகிகள் 480 பேர் மற்றும் சங்கம் நிர்வாகிகள் அனைவரின் முன்னிலையிலும் அச்சம் அகற்றிய அண்ணல் WPA.சௌந்தர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுச்செயலாளர் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க, இளைஞரணியினர் அனைவரும் WPA.சௌந்திர பாண்டியனாரின் வழி செல்வோமென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அதன் பின்னர் நா ம ச காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி இணைசெயலாளர் N.M.S.விவேகானந்தன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர்
நாடார் மஹாஜன சங்கம் தலைவர் திரு.V.S.B.குருசாமி வெள்ளையன் ,நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் திரு. G. கரிக்கோல்ராஜ், நாடார் மகாஜன சங்கம் பொருளாளர் திரு. A. C. C. பாண்டியன், NMS இளைஞரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி R.நித்யஜோதி, NMS ராஜா KSP கணேசன் அகாடமி பொறுப்பாளர் திருமதி. ஹேமாவதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி NMS இளைஞரணி துவக்க விழா நிகழ்வை துவக்கி வைத்தனர்.
நாடார் மஹாஜன சங்கம் தலைவர் திரு.V.S.B.குருசாமி வெள்ளையன் மற்றும் நா. ம. ச பொருளாளர் திரு. A. C. C. பாண்டியன் அவர்கள் புதிதாக துவங்கப்பட்ட NMS இளைஞரணி அமைப்பிற்கும், புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
NMS இளைஞரணி துவங்கப்பட்ட நோக்கம் குறித்தும், இளைஞரணி நிர்வாகிகள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும், நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் திரு. G. கரிக்கோல்ராஜ் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்.
நா. ம. ச செயலாளர் (பள்ளிகள் )திரு. T. ஐசக் முத்துராஜ் மற்றும் நா. ம. ச ஒருங்கிணைந்த சென்னை மண்டல செயலாளர் திரு.V. A. பிரபாகரன் மற்றும் நா ம. ச. காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி துணைத்தலைவர் திரு R. வனராஜன் அவர்கள் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினார்கள்.
மேலும் இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சியையும் வழிகாட்டுதலையும் NMS ராஜா KSP கணேசன் அகாடமி மூலமாக நாடார் மஹாஜன சங்கம் வழங்கி வருவதையும் அதன்மூலம் பயனடைந்து பணிவாய்ப்பை பெற்ற மாணவர்கள் பற்றியும் அகாடமி இயக்குனர் திரு G. பாண்டியராஜன், அகாடமி பொறுப்பாளர் திருமதி. ஹேமாவதி ஆகியோர் விளக்கிக் கூறினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நா ம ச. S. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயலாளர் திரு. R. சுந்தர் மற்றும் நா ம ச S. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி துணை தலைவர் திரு. T. A. பொன்னுசாமி ஆகியோர் NMS இளைஞரணியினருக்கு வணிக ரீதியாக சில ஆலோசனைகளைக் கூறி தேவைப்படும் உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். பின்னர் NMSஇளைஞரணி நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பொதுச்செயலாளர் அவர்கள் பதில் அளித்து கலந்துரையாடல் நடத்தினார்கள். அதன்பின்னர் NMS இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் சான்றிதழும், பயனுள்ள புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பான விழாவிற்கு நாடார் மஹாஜன சங்கம் மற்றும் சார்பு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் NMS இளைஞரணி தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி R. நித்யஜோதி அவர்கள் நன்றி கூறினார்கள். இவ்விழாவிற்கு முழு ஒருங்கிணைப்பை நா ம ச அலுவலர் திரு. D. ராஜேஷ் மற்றும் திரு. சஞ்சய் அவர்கள் செய்தார்கள்..
மேலும் NMS இளைஞரணியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், செயல்பாடுகளை விரிவு படுத்தவும் நாடார் சமுதாய மக்கள் வாழும் அணைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கவும், நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் திரு. G. கரிக்கோல்ராஜ், அவர்களால் 27-09-2025 முதல் திரு S. J. கிஃப்ட்சன் அவர்கள் NMS இளைஞரணியின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். மேலும் NMS இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளராக திரு. J. அறிவு ஒளி ஆண்டவர் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.. தற்பொழுது NMS இளைஞரணி மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது.